ஏர்போட் இமிகிரேஷனில் சூப்பராக வேலை செய்யும் ராணுவம்- 1,000 அதிகாரிகள் வேலை புறக்கணிப்பு போராட்டம்

இந்த செய்தியை பகிர

பிரித்தானியாவில் உள்ள மிக முக்கியமான விமான நிலையங்களில், சுமார் 1,000 இமிகிரேஷன் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று முதல் 8 நாட்கள் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள். இதனால் விடுமுறைக்குச் செல்லும், பயணிகள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டார்கள். ஆனால் ரிஷி சுண்ணக் இதற்கும் ஆப்பு வைத்தார்.

ராணுவத்தை இறக்கி, அவர்களை. குடிவரவு- குடியகல்வு பணியில் அமர்த்தியுள்ளார் ரிஷி. இதில் என்ன நன்மை என்றால், ராணுவத்தில் உள்ள இளைஞர்கள் படு வேகமாகச் செயல்பட்டு நெரிசலை உடனே நீக்கி விட்டார்கள். இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். எமக்கு அந்த அதிகாரிகள் வேண்டாம், ராணுவம் போதும் என்று பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.


இந்த செய்தியை பகிர