ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய நாடுகள் எதுவுமே பங்கு பற்றாது என்று ரம் நிர்வாகத்தினர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள். இதனால் ஐரோப்பிய ஒன்றியமே ஆடிப்போயுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய நட்பு நாடுகளை கடுமையாக விமர்சித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் பேச்சை பாராட்டியுள்ளார். அதே நேரம், உக்ரைன் போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனவும் டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.
முனிச் பாதுகாப்பு மாநாட்டில், அமெரிக்காவின் துணை அதிபர் வான்ஸ் ஐரோப்பிய குடியேற்றக் கொள்கைகளையும், ஐரோப்பிய தலைவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, ஜரோப்பாவுக்கு அச்சுறுத்தல் ரஷ்யாவிடம் இருந்து வருவதில்லை என்றும், ஐரோப்பாவில் இருந்தே வருகிறது என்றும் பேசியிருந்தார். இந்த பேச்சை அமெரிக்க அதிபர் டிரம்ப் புத்திசாலித்தனமானது என்று பாராட்டினார்.
அதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் சம்பந்தமான அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் பங்கேற்க உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதற்கிடையில், பிரிட்டனின் பிரதமர் கீர் ஸ்டார்மர், உக்ரைனின் எதிர்காலம் மூடிய கதவுகளுக்கு பின்னால் தீர்மானிக்கப்பட முடியாது என்று கூறி டிரம்ப் மற்றும் வான்ஸின் செயல்களை விமர்சித்தார். மேலும், இந்த முக்கியமான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை அழைக்காதது குறித்து அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
மேலும், பாரிஸில் நடக்கவிருக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். அதே நேரம், அந்த பேச்சு வார்த்தையில் அவர்களின் பங்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.