Lord chris patten meet ltte leader: புலிகளின் தலைவரை நான் சந்தித்தவேளை

உலகின் மிக…. மிக முக்கியமான ஒரு அரசியல்வாதி, புலிகளின் தலைவரை சந்தித்து விட்டால், புலிகளுக்கு சர்வதேச அங்கிகாரம் கிடைத்து விடுமே .. இதனை எப்படி தடுப்பது என்று சிங்கள அரசியல்வாதிகள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்… அன்று என்ன நடந்தது ?

பிரித்தானிய அரசின், மிகப் பெரிய ராஜதந்திரியும், முன்னாள் ஹாங் காங் நாட்டின் கவர்னருமான, Lord கிறிஸ் பட்டன், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்தது தொடர்பாக, சில கருத்துக்களை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். 45க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர் பிரித்தானிய அரசியலில், தவிர்க்க முடியாத ஒரு அரசியல் தலைவராக இருந்து வருகிறார். பல தரப்பட்ட பதவிகளில் அவர் இருந்துள்ளார்.

2003ம் ஆண்டு நவம்பர் மாதம், அதுவும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்த நாள் அன்று, கிறிஸ் பட்டன் ஹெலி மூலம் கொழும்பில் இருந்து கிளிநொச்சி சென்றார். அவர் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல முன்னர், ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்தார், பின்னர் பிரதமராக இருந்த ரணிலையும் சந்தித்தார். அவர் வன்னி சென்று தலைவர் பிரபாகரனை பார்க்க உள்ளார் என்ற செய்தி பரவியதால், சிங்களவர்கள் கூடி, கிறிஸ் பட்டன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு முன்னால் பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நான் அங்கே சென்றவேளை, புலிகளின் தலைவர்கள் மிகவும் அமைதியாக இருந்ததாக கிறிஸ் பட்டன் தெரிவித்துள்ளார். தம்மிடம் கோரிக்கை மனு ஒன்றை அவர்கள் கையளித்ததாகவும். பிரித்தானிய அரசுடன் புலிகல் நல்லுறவை வளர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் புலிகள் தெரிவித்தார்கள் என்று கிறிஸ் பட்டன் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் வாழ்கை தொடர்பாக ஒரு புதிய புத்தம் ஒன்று வெளியாகவுள்ள நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

2003ம் ஆண்டு கிறிஸ் பட்டன், புலிகளின் தலைவரை நிச்சயம் சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு தான், இலங்கை சென்றார். அவர் புலிகளை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார். அவர்கள் செயல்பாடுகள், கட்டமைப்பு, மேலும் புலிகள் பின்பற்றும் கடுமையான சட்ட திட்டங்கள் பற்றி நன்றாகவே அவர் தெரிந்தும் வைத்திருந்தார். இலங்கை சென்று நேரடியாக புலிகள் தலைவர்களை சந்திப்பது என்றால் அது ஒரு தலைப் பட்சமாக இருக்கும் என்ற காரணத்தால் தான் அவர், முதலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.

வெளியாக உள்ள புத்தகத்தில் புலிகள் தொடர்பாக பல தகவல் இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது: கீழே உள்ள அரிதான புகைப்படங்களை 2009ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி புலிகளின் ஊடகப் பிரிவும், அதிர்வு இணையத்திற்கு பிரத்தியேகமாக தந்தது. இந்தப் புகைப்படங்கள் கிறிஸ் பட்டன், கிளிநொச்சி வர சில மணி நேரங்கள் முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். சில காரணங்களால், தேசிய தலைவர் கிறிஸ் பட்டனோடு இருக்கும் புகைப்படத்தை எம்மால் வெளியிட முடியவில்லை !