UK wastes BILLIONS on crazy foreign projects: பிரிட்டன் எத்தனை மில்லியன் பவுண்டுகளை பாழாக்கியுள்ளது பாருங்கள் !

பிரித்தானிய அரசு பல மில்லியன் பவுண்டுகளை, அதுவும் மக்கள் வரிப்பணத்தை எப்படி எல்லாம் வீண் விரையம் செய்துள்ளது என்ற பட்டியல் வெளியாகி, அவைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் ஆண் பெண்ணாக மாறுவது, பெண் ஆணாக மாறுவது தொடர்பாக ஒரு மாநாட்டை கென்யாவின் நடத்தி. அதற்கு 100,000 ஆயிரம் பவுண்டை செலவு செய்துள்ளது பிரிட்டன் அரசு. இது தேவையா ?

இந்தியாவில் மின்சாரத்தை இயற்கை முறையில் பெற, வழிவகுக்கிறோம் என்ற போர்வையில் 114M மில்லியன் பவுண்டுகள் செலவு செய்யப்பட்டுள்ளது. கொங்கோ நாட்டில், குற்றம் புரிந்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு செல்கிறோம் என்ற போர்வையில், 9M மில்லியன் பவுண்டுகள் செலவு. இப்படி பல உலக நாடுகளின் உள்விடையத்தில் மூக்கை நுளைத்து, அங்கே பெரும் தொகையான பணத்தை செலவு செய்துள்ளது பிரிட்டன் அரசு. ஆனால் தற்போது பாதுகாப்பிற்கு பட்ஜெட்டில் பணம் போதாது என்று தலையைச் சொறிகிறது பிரிட்டன் அரசு.

இதனால் மக்கள் மீது வரியை கூட்டுவது தொடர்பாக மேலும் ஆரயப்படுகிறது. முதலில் பணத்தை வீண் விரையம் செய்வதை நிறுத்துங்கள். அமெரிக்காவில் ரம் எடுத்துள்ள நடவடிக்கை போல கடுமையான விதி முறைகளை பிரிட்டன் பின்பற்ற வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

உள் நாட்டில் பல அபிவிருத்தி திட்டங்கள் தடைப்பட்டுள்ள நிலையில். குண்றும் குழியுமாக உள்ள பிரிட்டன் வீதிகளை கூட சரி செய்ய அரசு பணத்தை ஒதுக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளில் பணத்தை தேவை இல்லாமல் வீண் விரையம் செய்கிறார்கள்.