நாசமா போன பிரித்தானியா 3ம் உலக நாடுகளை விட கேவலமாக ஆகிவிட்டது என்கிறார்கள் !

நாசமா போன பிரித்தானியா 3ம் உலக நாடுகளை விட கேவலமாக ஆகிவிட்டது என்கிறார்கள் !

பிரித்தானியாவில் வசிக்கும் பலர், கார் ஓட்டும் போது வீதிகளை கவனித்துப் பார்த்து இருப்பீர்கள். பல இடங்களில் குன்றும் குழியுமாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளை தவிர ஏனைய வீதிகளை அந்த மாநிலங்களில் உள்ள கவுன்சிகள் கவனிப்பதே இல்லை. பல குழிகள் வீதிகளில் உள்ளது. இதனால் கார் டயர் பஞ்சர் ஆவது மட்டும் அல்ல, பல விபத்துகளும் நடக்கிறது. அது போக மழை பெய்தால் போதும் பல இடங்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இவை தான் இப்படி என்றால்…

கவுன்சில் வாரம் ஒரு முறை வீட்டுக் கழிவுகளை அகற்றி வந்தது. ஆனால் சில வருடங்களாக 2 வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டுக் கழிவுகளை அகற்றும் வாகனம் வருகிறது. அதிலும் வங்கி விடுமுறை, அல்லது நல்ல நாள் பெருநாள் என்றால், அந்தக் கிழமையும் லேட்டாகவே வந்து கழிவுகளை அகற்றுகிறார்கள். இதனால் வீதிகள், வீடுகள் நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. எலிகள் தொல்லை பன் மடங்காக அதிகரித்துள்ள நிலையில். நரிகளும் பல்கிப் பெருகி, உள்ளது. இரவில் நரிகள் இந்தக் கழிவுப் பொருட்களை பிரித்து உண்டு வருவதோடு , சில புத்தி உள்ள நரிகள் பிளாஸ்டிக் “பின்” களை எப்படித் திறப்பது என்று கூட நன்றாக அறிந்து வைத்திருக்கிறது.

இவை இவ்வாறு இருக்க, புல் பற்றைகள் செடிகொடிகளை கவுன்சில் தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் அதனைச் சரியாக செய்யாததால், பல இடங்களில் முற் புதர்கள், தோன்றியுள்ளது. இதுபோக பல இடங்களில் சிறுவர்கள் ஸ்பிரே பெயின்ட் கொண்டு ஏதாவது கிறுக்கி விடுகிறார்கள். அதனையும் கட்டுப்படுத்த முடியாமல் கவுன்சில் திண்டாடி வருகிறது. இதற்கு முதன்மைக் காரணம், அரசு தான். அதாவது அரசு எந்த ஒரு பணத்தையும் கவுன்சிலுக்கு கொடுப்பதே இல்லை. மாநில கவுன்சில்கள் அந்த மாநிலத்தில், மக்களிடம் வசூலிக்கும் கவுன்சில் டாக்ஸ் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தான் , சாலைகளை புணரமைக்க வேண்டி உள்ளதாம். இதுபோக.. பொலிசாரின் சம்பள பணத்தையும் .. கவுன்சில தான் கொடுக்கிறது..

மேலும் சாலை விளக்குகளுக்கான மின் கட்டணத்தை கவுன்சில் தான் கொடுக்கிறது. இவ்வாறு பெரும் தொகைப் பணத்தை கவுன்சில் செலவு செய்வதால், சில கவுன்சிலிடம் பணமே மிஞ்சுவது இல்லை என்கிறார்கள். இதனால் பல வேலைத் திட்டங்களை அவர்களால் முன்னெடுக்க முடியவில்லை. விலைவாசி ஒரு பக்கம், இந்த கவுன்சில் பிரச்சனை மறுபக்கம், வேலை இல்லா திண்டாட்டம், வட்டி விகித அதிகரிப்பு, 100£ உழைத்தால் 25 பவுண்டுகளை அரசு பிடித்துக் கொண்டு 75 பவுண்டையே கொடுக்கிறது. சுமார் 22% விகித டாக்ஸ், கார்களின் விலை ஏற்றம், பெற்றோல் விலை அதிகரிப்பு, இன்சூரன்ஸ் விலை அதிகரிப்பு, உணவின் விலை அதிகரிப்பு என்று, மக்கள் வாழவே முடியாத ஒரு நாடாக பிரித்தானியா மாறிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள். இதனால் பலர் மீண்டும் புறப்பட்டு தமது சொந்த நாடுகளை நோக்கிச் செல்கிறார்கள்.

இவை அனைத்தும் சீராக எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது தெரியவில்லை. இல்லையேல் இப்படியே இது தொடர்ந்து கொண்டே செல்லவும் கூடும். ஆக மொத்தத்தில் பிரித்தானியாவில் உள்ள ஒரே ஒரு நல்ல விடையம் என்னவென்றால், மருத்தும் மட்டும் தான். அது ஒன்று மட்டும் தான் இலவசமாக உள்ளது. ஆனால் மக்களிடம் 100 £ பவுண்டுகளை டாக்ஸ் என்ற போர்வையில் பறித்துக் கொண்டு, 20£ பவுண்டுக்கு மருத்துவத்தை கொடுத்து என்ன லாபம், ? அண்டை நாடுகளான பிரான்ஸை அல்லது ஜெர்மனியை எடுத்துக் கொண்டால் வாழ்கைச் செலவும் என்பது, மிகவும் குறைந்த விகிதத்திலேயே இன்னமும் உள்ளது. அனைவரும் பிரித்தானியா வந்து குடியேற ஆசைப்படுகிறார்கள் ! ஆனால் அங்கே சென்றால் தான், அங்கே உள்ள மக்கள் லூட்டி அடிப்பது குடியேறிகளுக்கு தெரிய வருகிறது.