சிவராஜ் குமார் இருந்தும் கர்நாடகாவில் செல்ஃப் எடுக்காத கேப்டன் மில்லர்!

சிவராஜ் குமார் இருந்தும் கர்நாடகாவில் செல்ஃப் எடுக்காத கேப்டன் மில்லர்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் சுமாரான வசூலைப் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ் குமார் இருந்ததால் கர்நாடகாவில் பெரிய அளவில் பிஸ்னஸ் செய்யப்பட்டதாம். ஆனால் அவருக்கு பெரியளவில் வேடம் இல்லை என்பதால் கன்னட ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். அதனால் அங்கு எதிர்பார்த்த வசூலை கேப்டன் மில்லர் அங்கு பெறவில்லையாம்.