கார் முழுக்க வாண வேடிக்கை… சின்னத் துண்டு சிகரெட் செய்த வேலையை பாருங்கள் !

கார் முழுக்க வாண வேடிக்கை… சின்னத் துண்டு சிகரெட் செய்த வேலையை பாருங்கள் !

அட சிகரெட் பிடிக்காதிங்க என்று சொன்னால் யார் தான் கேட்க்கிறார்கள் ? நெதர்லாந்தில் நேற்று நடந்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 21 வயதாகும் கேர்பான் என்னும் இளைஞர், சுமார் 75KG எடை கொண்ட வான வேடிக்கைகளை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். இதனை அவர் தனது கடையில் வைத்து விற்க்கவே வாங்கிச் சென்றுள்ளார். இந்த நிலையில் காரில் அவர் தனியாக பயணித்துக் கொண்டு இருந்தவேளை, ஒரு சிகரெட்டை ஊதித் தள்ளி, பின்னர் கட்டையை வெளியே எறிந்துள்ளார்.

தன் வினை தன்னைச் சுடும் என்பது போல வீசிய காற்று, மீண்டும் அந்த சிகரெட் கட்டையை அப்படியே கொண்டு வந்து காரில் பின் சீட்டில் போட்டு விட்டது. அங்கே இருந்த வெடி பொருட்கள் மற்றும் வாணவேடிக்கைகள் திடீரென தீ பிடித்து வெடிக்க ஆரம்பித்து விட்டது. கார் தீ பற்றியது மட்டும் அல்லாது பல நிமிடங்களாக , காரில் இருந்து வாணவேடிக்கைகள் சீறிப் பாய்ந்த வண்ணம் இருந்தது. அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.