சத்ரபதியோடு ரஷ்மிகா மந்தானா காதலா அவரே சொன்ன க்யூட் பதில் இதுதான் !

Spread the love

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுபோன்ற புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் இருவரும் டேட்டிங் செல்வதாக வதந்திகள் சமீபகாலகமாக பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் பேசியிருக்கும் கருத்துகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான பெல்லம்கொண்டா சுரேஷின் மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக அறியப்படுகிறார். இவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா விமான நிலையம் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் ஒன்றாகச் சந்தித்துக் கொள்வதுபோன்ற புகைப்படங்கள் வெளியானதை அடுத்து இருவரும் டேட்டிங் செய்வதாகவும் சில வதந்திகள் பரவிவருகின்றன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் இது எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது முற்றிலும் ஆதாரமற்றது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் உண்மையில் விமான நிலையத்தில் ஒருவரையொருவர் மோதிக் கொண்டோம். நாங்கள் இருவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள். அடிக்கடி மும்பைக்கு சென்று வருகிறோம். அதனால் இதுபோன்ற சந்தர்ப்பம் அமைந்துவிடுகிறது எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ராஷ்மிகா மந்தனா மிகவும் துடிப்பான நபர். அவர் அதே எனர்ஜியுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் நடிகை ராஷ்மிகாவை பாராட்டியுள்ளார். ஏற்கனவே நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் தற்போது பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாசுடன் டேட்டிங் செய்வதாகத் தகவல்கள் பரவிய நிலையில் ரசிகர்களிடையே இத்தகவல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தற்போது பிரபாஸ் மற்றும் ராஜமௌலியின் பிளாக் பஸ்டர் படமான “சத்ரபதி“ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துமுடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்றுவெளியான நிலையில் மே 12 ஆம் தேதி இப்படம் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply