
ஆரோவில் நடைபெற்ற வளர்ச்சிக் குழுக் கூட்டம் மற்றும் பொங்கல் விழா ஆகியவற்றுக்கு துணை ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார். இதன்போது உரையாற்றிய தமிழிசை, பொதுவாக முதலமைச்சர்களின் கருத்தானது முற்றிலும் தவறானதாகும், முதலில் துணை ஆளுநர்களுக்குள்ள பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்கள் என்ன என்பதனை முதலமைச்சர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரவித்தார். அதனை புரியாமல் எங்களுக்கு எந்த விதமான அதிகாரங்களும், பொறுப்புக்களும் இல்லையெனக் கூறுவது வேடிக்கையானது எனத் தெரிவித்தார்.
அண்மையில் பிரச்சினையினை தோற்றுவித்த தமிழ்நாடு மற்றும் தமிழகம் இரண்டுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை எனவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப் பெரிய சரித்திரம் உள்ளது, எனவே எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட்டால்தான் மக்கள் நின்மதியான வாழ்க்கையினை வாழ முடியும் அதுவே எனது விருப்பமும் ஆகும் எனத் தமிழிசை தெரிவித்தார்.