எத்தியோப்பியாவாக மாறிய லண்டன் ஆக்சிஜன் இல்லை பிணவறை நிரம்பி விட்டது A&E இயங்கவில்லை

இந்த செய்தியை பகிர

லண்டன் எத்தியோப்பியா போல மாறிவிட்டது, என்று சொன்னால் ஆச்சரியப்பட இல்லை. பலருக்கு இந்த நிலை புரியாது. காரணம் அவர்கள் இதுவரை வைத்தியசாலை சென்றிருக்க மாட்டார்கள். மருத்துவப் பணியாளர்கள் செய்து வரும் வேலை நிறுத்தம் காரணமாக, பெரும் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது, லண்டனில் உள்ள நூற்றுக் கணக்கான வைத்தியசாலைகள். பல வைத்தியசாலையில் ஆக்சிஜன் முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும் சொல்லப் போனால்..

பல வைத்தியசாலையில் உள்ள பிண அறைகள் முட்டி வழிகிறது. அதனை போஸ் மோட்டம் செய்து அறிக்கை தயாரித்து உரியவரிடம் கொடுக்க சரியான ஆட்கள் இல்லை. இது போக A&E அவசர சேவைக்குச் சென்றால், 4 நாட்கள் வரை காத்திருக்கவேண்டிய சூழ் நிலை சில பகுதிகள் உள்ளது. சிறுவர்கள் சிறுமியர்கள் A&Eயில் உள்ள நாற்காலிகளில் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பா அம்மாவும் கூடவே உள்ளார்கள். மேலும்..

அவசரமாக அம்பூலன்ஸை அழைத்தால், 5 மணி நேரம் கழித்தே வருகிறார்கள். அதுவும் உயிர் போன பின்னர். இப்படி நாட்டில் உள்ள வைத்தியசாலைகள் பெரும் பாதிப்பில் உள்ளது.


இந்த செய்தியை பகிர