நடைபெற்று வரும் G20 உச்சி மாநாட்டில், பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அதில் அனைவரும் புதிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இந்திய தலைவர் மோடி, கனேடிய அமெரிக்க தலைவர்களும் சுண்ணக்கை சந்தித்தார்கள். ஆனால் சீனத் தலைவர் XI- ஜின் -பிங் மட்டும் ரிஷி சுண்ணக்கை சந்திப்பதை தவிர்த்து வந்தார். அவர் மீண்டும் சீனா செல்லும் வரை,
பிரித்தானிய பிரதமரை சந்திக்கவே இல்லை. இது தைவானுக்கு பிரித்தானியா கொடுத்து வரும் ஆதரவால் தான் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். தைவான் நாட்டை, சீனாவின் ஒரு பிரதேசம் என்று கூறிவருகிறது சீனா. ஆனால் தைவான் நாடு சுதந்திரமாக இருக்கவே எண்ணுகிறது. இன் நிலையில் படைகளைப் பாவித்து தைவானை கைப்பற்ற சீனா முயன்று வரும் நிலையில். தைவானுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் அதிநவீன ஆயுதங்களை கொடுத்து வருகிறது. உக்கிரைன் மீது..
ரஷ்யா போர் தொடுத்து என்ன ஆனது என்பதனை சீனா தற்போது அவதானித்து வருகிறது. அது போன்ற ஒரு நிலை தைவான் மீது படை எடுக்கும் போது நடந்து விடக் கூடாது என்பதில் சீனா மிகவும் கண்ணும் கருத்துமாக உள்ளது. இதனால் படை எடுப்பை பின்போட்டு வருகிறது சீனா.