அதிர்ச்சி: கரூர் துயரம்… மன அமைதிக்காக ‘ஆஃப்லைன்’ சென்ற பிரபல இயக்குநர்!

அதிர்ச்சி: கரூர் துயரம்… மன அமைதிக்காக ‘ஆஃப்லைன்’ சென்ற பிரபல இயக்குநர்!

 

‘மாஸ்டர்’, ‘லியோ’ போன்ற வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றிய பிரபல இயக்குநரும் எழுத்தாளருமான ரத்ன குமார் அவர்கள், கரூர் சோகத்தால் தனது மன அமைதியை இழந்து, அதிர்ச்சிகரமான ஒரு முடிவை எடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து தன்னால் மீள முடியவில்லை என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டதாவது:

“கரூர் சம்பவத்தில் இருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது வீடியோக்கள் வந்துகொண்டிருக்கிறது. அதைப் பார்த்து என் இதயம் உடைந்துபோகிறது.”

“குறிப்பாக ஒரு வீடியோவைப் பார்த்து நான் பலர் மீது இருக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அதனால் மன அமைதிக்காக நான் (சமூக வலைத்தளங்களில் இருந்து) ‘ஆஃப்லைன்’ செல்லப் போகிறேன். நன்றி,” என ரத்ன குமார் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பலர் எடுத்த துயரமான வீடியோக்கள் தினமும் வெளிவருவதுதான் இயக்குநரின் இந்தப் பதற்றமான முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது. கரூர் சோகத்தின் வீரியம், திரைத்துறை பிரபலங்களையும் இவ்வாறு பாதித்திருப்பது பலரையும் உலுக்கியுள்ளது.

Loading