Sivakarthikeyan’s Family Visit to Thalasayan Perumal Temple
சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் மாமல்லபுரம் திருத்தலசயன பெருமாள் கோவிலில் தரிசனம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 63வது தலமாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு, சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். பஞ்சமியை முன்னிட்டு, கோவில வளாகத்தில் உள்ள கருட ஆழ்வார் சன்னதியில் தனது மனைவியுடன் சிறப்பு பூஜையும் செய்தார்.
பின்னர், ஸ்தலசயன பெருமாள் மற்றும் நீலமங்கை தாயாரை தரிசித்தார். கோவிலில் இருந்த பக்தர்கள் அவரைச் சுற்றி கூடி, புகைப்படங்கள் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிவகார்த்திகேயன் கோவிலில் இருந்த நரிக்குறவர் பெண்களுடன் செல்ஃபி எடுத்தார்.