பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 29வது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து அவர் மீது வாழ்த்து மழை பெய்தது.
சில நாட்களுக்கு முன், ராஷ்மிகா தனது நெருங்கிய தோழனும் நடிகருமான விஜய் தேவரகொண்டாவுடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டார். இருவரும் ஏர்போர்ட்டில் தங்களது ஸ்டைலிஷ் தோற்றத்துடன் படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
பின்னர் வெளியாகிய தகவலின்படி, இந்த ஜோடி ஓமன் நாட்டுக்கு பறந்திருக்கிறார்கள். அங்கு, கடற்கரை பகுதியில் இருவரும் நேரத்தை செலவழித்தது போன்று, ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரைப் பின்னணியில் எடுத்த அழகிய ஸ்டில்களை பகிர்ந்துள்ளார்.
இந்த போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இவர்களின் வெளிநாட்டு ட்ரிப் மற்றும் ரொமாண்டிக் மொமெண்ட்ஸ் குறித்து இணையம் முழுக்க பேசப்பட்டு வருகிறது.