“விமர்சிக்க வேண்டாம்… இதுதான் உண்மை!” – இரண்டாவது திருமணம் குறித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம்

‘கில்லி’ திரைப்படத்தில் விஜய்யின் அப்பா வேடத்தில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. வில்லன் கதாபாத்திரங்களில் அடிக்கடி தோன்றிய இவர், பல படங்களில் தனது நடிப்பால் பாராட்டைப் பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு, 57 வயதில் தனது காதலி ரூபாலியுடன் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இதற்கு இணையத்தில் பலர் எதிர்ப்பும், விமர்சனங்களும் தெரிவித்தனர்.

தற்போது, இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி.

“இந்த வயதில் திருமணம் தேவைதானா? லிவ்-இன் உறவாக வாழலாமே?” என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், வாழ்க்கையை நம்மை சந்தோஷமாக செய்யும் வழியில் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் திருமணத்தை ஒரு விழாவாக கொண்டாடினோம்.

“மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து, பலர் தங்கள் உண்மையான விருப்பங்களை தியாகம் செய்கிறார்கள். ஆனால், எனக்கு அது தேவையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.