நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் தனது கடின உழைப்பால் உயர்ந்த பிரபல நடிகையாக திகழ்கிறார். தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர், உடல்நலக்குறைவால் சில மாதங்கள் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், கடைசியாக “சிடாடல்” வெப் தொடரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். தொடர்ந்து பல புதிய படங்களில் கமிட் ஆகியிருக்கும் சமந்தா, சமீப காலமாக “The Family Man” வெப் சீரிஸ் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.
ரசிகரின் கேள்விக்கே சமந்தாவின் சூப்பர் பதில்!
சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவுக்கு சென்ற சமந்தா, அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “இந்த புகைப்படங்களை எடுத்தது யார்?” என சாமர்த்தியமான கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலாக சமந்தா, “சிட்னி சுற்றுலா கைடான நவோமி தான் இந்த புகைப்படங்களை எடுத்தார்!” என கூலாக பதிலளித்துள்ளார்.
சமந்தாவின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
View this post on Instagram