அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் – “குட் பேட் அக்லி” டிரெய்லர் எப்போது வெளியாகும்?

அஜித் நடித்து முடித்த புதிய திரைப்படம் “குட் பேட் அக்லி” மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் ராகுல் தேல், யோகி பாபு, டாம் சாக்கோ, அவினாஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றுகிறார்.

சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாக உள்ளது.

டிரைலர் அறிவிப்பு:
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில், இதுவரை வெளியான 2 பாடல் புரொமோக்கள் ரசிகர்களின் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சமூக ஊடகங்களில் வலம்வரும் தகவலின் படி, வரும் ஏப்ரல் 3ம் தேதி “குட் பேட் அக்லி” படத்தின் டிரைலர் வெளியீடு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.