நடிகர் நாகார்ஜுனாவால் குபேராவுக்குப் பிறகு கூலிக்கும் லாபம்!

நடிகர் நாகார்ஜுனாவால் குபேராவுக்குப் பிறகு கூலிக்கும் லாபம்!

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம், தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம், படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் உலகளவில் 470 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தெலுங்குப் பதிப்பு மட்டும் சுமார் 80 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வசூல், தெலுங்குத் திரையுலகில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், படம் 500 கோடி ரூபாய் வசூலை எட்ட வேண்டுமானால், வரும் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற வேண்டும்.

சமீபத்தில் வெளியான தனுஷின் குபேரா திரைப்படம், தமிழில் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், தெலுங்கில் நாகார்ஜுனா நடித்ததால் நல்ல வசூல் பெற்றது.

அதேபோல, கூலி படத்தில் நாகார்ஜுனா நடித்த சைமன் என்ற கொடூர வில்லன் கதாபாத்திரம், தெலுங்கு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாகார்ஜுனாவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.