பெரும் அதிர்ச்சி: கோலிவுட் நடிகர் ரவி மோகனின் சொத்துக்கள் முடக்கம்? சினிமா உலகில் பரபரப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகனுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘பராசக்தி, கராத்தே பாபு’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்து வரும் ரவி மோகனின் சொத்துக்கள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன நடந்தது?
பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம், தங்களது புதிய படத்தில் நடிப்பதற்காக ரவி மோகனுக்கு ₹15 கோடி சம்பளம் பேசப்பட்டு, அதில் ₹6 கோடியை முன்பணமாக வழங்கியுள்ளது. ஆனால், ஒப்பந்தப்படி ரவி மோகன் படத்தில் நடிக்க வரவில்லை என கூறி தயாரிப்பு நிறுவனம் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்குப் பதிலளித்த ரவி மோகன், “படத்திற்காக நான் 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும், தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தொடங்கவில்லை. நான் கொடுத்த முன்பணத்தைத் திருப்பித் தர கேட்டேன். இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்பிற்காகத் தயாரிப்பு நிறுவனம் ₹9 கோடி இழப்பீடு தர வேண்டும்” என்று கூறி பதில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரவி மோகன் ₹5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
முடங்கும் சொத்துக்கள்!
நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் ரவி மோகன் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. இதனால், ரவி மோகனின் சொத்துக்களை முடக்கம் செய்ய, தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உத்தரவு, ரவி மோகன் திரைப்படத் துறையில் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவால் ரவி மோகன் தனது சொத்துக்களை இழக்க நேரிடுமா அல்லது இந்த பிரச்சனைக்குச் சமரசம் ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.