இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் சென்னையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான புதிய தேதியையும், புதிய இடத்தையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது அனிருத் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஜூலை 27 அன்று நடைபெறவிருந்த அனிருத்தின் “ராக்ஸ்டார் ஆன் ஸ்டேஜ்” (Rockstar On Stage) இசை நிகழ்ச்சி, மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, அனிருத்தின் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 23, 2025 அன்று, சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள விஜிபி மைதானத்தில் (VGP Grounds) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோவையில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னை நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி கோவையைக் காட்டிலும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.