இசைஞானிக்கு பாராட்டு விழா: தமிழ்நாடு அரசால் சிலிர்த்துப் போன இளையராஜா!

இசைஞானிக்கு பாராட்டு விழா: தமிழ்நாடு அரசால் சிலிர்த்துப் போன இளையராஜா!

இசைஞானி இளையராஜாவுக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து இளையராஜா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில், லண்டனில் ‘சிம்பொனி’ இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த இளையராஜாவின் இசைப் பயணத்தின் 50-வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், வெளிநாட்டு கலைஞர்களின் இசைக் கச்சேரியும் இடம்பெற உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கெனவே இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதியன்று இந்த விழா நடைபெறும் என்று அறிவித்திருந்தார். சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டு, இப்போது செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா குறித்து இளையராஜா, “நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அதேபோல நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.