தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் கடைசி படம் கங்குவா பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும், ரசிகர்களிடத்தில் பெரும்பாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து, சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதில் பெரும் கவனம் பெற்ற ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவிற்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார், மேலும் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ரெட்ரோ படத்தின் அதிரடி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில், சூர்யா டப்பிங்கின் போது, “ரெட்ரோ டப்பிங் முடிஞ்சுது, கட் அண்ட் ரைட்” என கூறுவதை காணலாம். இதனிடையே, கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுக்குப் அருகில் நின்று கொண்டு, இருவரும் சிரித்துக் கொண்டுள்ளனர்.
இந்த வீடியோ, Ghibli ஸ்டைலில் மாற்றப்பட்டு, ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததை அந்த வீடியோ மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
View this post on Instagram