தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ரஷ்மிகா மந்தனா, முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா மீது கொண்ட பிரமிப்பை வெளிப்படுத்தி சமூக வலைத்தளத்தையே அதிர வைத்துள்ளார்!
விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘கிங்டம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான நொடியிலிருந்து, ரசிகர்கள் மட்டுமல்லாது திரை உலக பிரபலங்களும் வாயடைத்துப் போயுள்ளனர். இந்த டிரெய்லரைப் பார்த்து வியந்துபோன ரஷ்மிகா, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான, அதே சமயம் வைரலான பதிவை வெளியிட்டுள்ளார்.
“இதெல்லாம் நியாயமில்லை! விஜய் தேவரகொண்டா, நான் எப்போதும் உங்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் – நீங்கள் வேறு ரகம்!” என்று வியப்புடன் தனது பதிவை ஆரம்பித்துள்ளார் ரஷ்மிகா.
அவர் மேலும், “நான் உங்களைப் போலவே நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டே இருக்கிறேன். அப்படி நான் கற்றுக்கொண்டாலும், உங்கள் நடிப்பில் 50% மட்டுமே என்னால் கொண்டு வர முடியும்!” என்று வெளிப்படையாகத் தனது ஆதங்கத்தையும், வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
‘கிங்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரையும் “பெரும் மேதைகள்” எனப் புகழ்ந்த ரஷ்மிகா, படத்தில் நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ் மிகவும் அழகாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
ரஷ்மிகாவின் இந்த வைரல் பதிவு, இரு நடிகர்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான நட்புறவை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்தப் பதிவு, சமூக வலைத்தளங்களில் நிமிடத்துக்கு நிமிடம் பகிரப்பட்டு வருகிறது.