திறமையான நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் கோவையிலிருந்து சென்னை வந்தவர் தர்ஷா குப்தா. சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திய அவர், பின்னர் சில திரைப்படங்களிலும் நடித்தார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் தர்ஷா குப்தா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ சீரியல் மூலம் அறிமுகமான தர்ஷா குப்தா, விஜய் தொலைக்காட்சியில் ‘செந்தூரப்பூவே’, ‘அவளும் நானும்’ போன்ற தொடர்களிலும் நடித்தார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று தனது சமையல் திறமையையும், புகழுடன் இணைந்து செய்த நகைச்சுவைகளையும் ரசிகர்களைக் கவர்ந்தார்.
‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவுக்கு, மோகன் ஜி இயக்கிய ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்திலும் நடித்தார். எனினும், இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்ததால், அவர் இறுதி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தனது கதைகள் மற்றும் அழுகையின் மூலம் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தார். இதன் விளைவாக, நாமினேஷனில் சிக்கி மூன்று வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியேறிய பின், விளையாட்டைப் புரிந்துகொள்ளும் முன்பே வெளியேறிவிட்டதாக வருத்தப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்ஷா குப்தா, சினிமாவில் நடிகையாக நிலைபெற கவர்ச்சி முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார் போல் தெரிகிறது. தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.
அந்த வகையில், தற்போது தர்ஷா குப்தா தனது முன்னழகை எடுப்பாக காட்டி, கைகளை உயர்த்தி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த புகைப்படத்திற்கு தர்ஷா குப்தா “ரசிப்பது உன் கண்கள் என்றால் எழுதுவது என் கைகள் அல்லவா” என்ற கவிதை வரிகளை தலைப்பாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.