தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கான கதாநாயகி இதோ!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவரது மகன் விஜய், நடிகராக பரபரப்பாக செயல் பட்டு, தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், நாயகன் மற்றும் நாயகி தேர்வு குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

நாயகன் & நாயகி தேர்வு

பட அறிவிப்புக்குப் பிறகு, நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு சுந்தீப் கிஷன் இப்படத்தின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

மேலும், 2021 ஆம் ஆண்டு வெளியான ஜாதி ரத்னாலு படத்தின் மூலம் அறிமுகமான ஃபரியா அப்துல்லா, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோயின்.. ப்ளாஷ்பேக் பார்த்தால் இவர் செட்டாவாரானு தெரியலயே? - CineReporters

விஜய் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இயக்குநர் அறிமுகமாகும் நிலையில், ஜேசன் சஞ்சயின் இயக்குநர் பயணம் தமிழ் சினிமாவில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது!