கொரியன் பாப் பாடகர் பிடிஎஸ் தனது புதிய ஆல்பத்தை 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இசை உலகில் தனக்கென தனி இடத்தை பெற்றவர் தென்கொரிய பாடகர் பிடிஎஸ். இவரது இசைக்கும், பாடலுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். பிடிஎஸ் இசையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தபோது வடகொரியாவுடனான போர் பதற்றத்தால் தென்கொரியாவில் உள்ள ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதனால், கடந்த 2023ம் ஆண்டு முதல் பிடிஎஸின் கே-பாப் இசைக்குழுவினர் ராணுவத்தில் இணைந்து ராணுவ பயிற்சியை எடுத்தனர். தற்போது ராணுவ பயிற்சி நிறைவடைந்துள்ளதால் பிடிஎஸ் மீண்டும் தனது இசை ஆல்பம் மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசையால் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
“ஜூலை முதல்… நாங்கள் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். எனவே, (இந்த மாதம்) முதல் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து இசையை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம்” என்று குழுவின் தலைவர் RM ரசிகர்களுக்கான தளமான வெவர்ஸில் (Weverse) தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் புதிய ஆல்பத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பிடிஎஸ் குழு இம்மாதம் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு ஏழு உறுப்பினர்களும் படிப்படியாக ஒன்றிணைந்து இசை தயாரிப்பு மற்றும் வரவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு தங்களை தயார்ப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.