விஜய்யின் பிரம்மாண்ட பேரணிகள் குறித்து கமல் சரமாரி தாக்குதல்! – “கூட்டம் வாக்குகளாக மாறாது”

விஜய்யின் பிரம்மாண்ட பேரணிகள் குறித்து கமல் சரமாரி தாக்குதல்! – “கூட்டம் வாக்குகளாக மாறாது”

விஜய்யின் பிரம்மாண்ட பேரணிகள் குறித்து கமல்ஹாசன் சரமாரி தாக்குதல்! – “கூட்டம் வாக்குகளாக மாறாது” என அதிரடி !

சென்னை: நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை திரட்டி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விஜய்யின் அரசியல் வியூகம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

“கூட்டம் கூடுவதெல்லாம் வாக்குகளாக மாறிவிடாது” என நேரடியாக விஜய்யை சாடியுள்ளார் கமல்ஹாசன். விஜய்யின் பேரணிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கும் விதமாக, கமல்ஹாசனின் இந்த கருத்துக்கள் அமைந்துள்ளன.

அவர் மேலும் கூறுகையில், “இந்தக் கருத்து எல்லா அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும், இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொருந்தும். கூட்டம் சேர்ந்துவிட்டால் அது எல்லாம் ஓட்டுகளாக மாறாது” என்று தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனம், ஏற்கனவே அரசியல் களத்தில் உள்ள இரு பெரும் ஆளுமைகளுக்கிடையே உள்ள போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.