கீர்த்தி சுரேஷின் ஸ்டைலிஷ் அவதாரம் – திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சி குறையல!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன் திரையுலக பயணத்தைத் தொடங்கிய கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ‘ரஜினிமுருகன்’, ‘பைரவா’, ‘சர்க்கார்’, ‘ரெமோ’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’) திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பால் தேசிய விருது பெற்ற கீர்த்தி, அண்மையில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும், தொடர்ந்து நடிப்பில் ஈடுபட்டு வரும் அவர், இப்போது மீண்டும் தனது அழகான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

சமீபத்தில், கருப்பு நிற ட்ரெண்டிங் சேலையில் ஒரு விருது விழாவிற்கு சென்ற கீர்த்தி, அங்கு எடுத்த கிறங்கடிக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வைரலாகி, லைக்குகள் மற்றும் கமெண்டுகளை குவித்துவருகின்றன.

திருமணத்திற்குப் பிறகும் கீர்த்தியின் ஸ்டைலிஷ் லுக்குகள் அதிக கவனம் பெற்றுவர, ரசிகர்கள் “எப்போதும் அழகான கீர்த்தி!” என புகழ்ந்து வருகின்றனர்!