புது சீசன்… பழைய ருசி! குக் வித் கோமாளி 6 ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’ கடந்த 5-ம் சீசனில் சர்ச்சைகள் மூழ்கியது.
மணிமேகலை – பிரியங்கா இடையேயான சண்டை, மேலும் பல பிரபலங்கள் சன் டிவி ஷோவுக்கு மாறிச் சென்றது அதற்கான முக்கிய காரணங்களாக இருந்தது.

இதையடுத்து ‘குக் வித் கோமாளி 6’ சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்தன. இப்போது அதன் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

ப்ரோமோவில், கடந்த ஐந்து சீசன்களும் அதே கோமாளிகள், அதே ஜோக்குகள், அதே அரைச்ச மாவை தானே மறுபடியும் அரைக்க போறீங்க என ஒரு பெண் கேட்பது காட்சி இடம் பெற்றிருக்கிறது.

இதற்கு புகழ், சுனிதா உள்ளிட்ட கோமாளிகள் நகைச்சுவையோடு பதில் சொல்கின்றனர். ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கலகலப்பாக பரவி வருகிறது.