டெல்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக, தமிழ் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடி வழக்கு 2010 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சீனிவாசனை டெல்லி காவல்துறை தேடி வந்தது. 2018 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த அவரை, தற்போது டெல்லி காவல்துறை சென்னை வானகரத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்துள்ளது.
ஏற்கனவே, இதே போன்ற பல மோசடி வழக்குகளில் பவர் ஸ்டார் சீனிவாசன் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது சென்னையில் மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.