ராஷ்மிகா மந்தனா பேயாக மாறுகிறார்? காஞ்சனா 4 படத்தில் திடீர் திருப்பம்!

ராஷ்மிகா மந்தனா பேயாக மாறுகிறார்? காஞ்சனா 4 படத்தில் திடீர் திருப்பம்!

தமிழ் சினிமாவின் முன்னணி திகில் பட வரிசையான ‘காஞ்சனா’வின் நான்காம் பாகம் குறித்து ஒரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. இந்த முறை ரசிகர்களின் ‘National Crush’ என்று அழைக்கப்படும் நடிகை ரஷ்மிகா மந்தனா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து, ஒரு பேய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்துள்ளன.

இதுவரை காதல், நகைச்சுவை, குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்து ரசித்த ரஷ்மிகாவை, ஒரு பேயாக பார்ப்பது ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், படக்குழுவினர் ரஷ்மிகாவை அணுகி பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையானால், ‘காஞ்சனா 4’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரஷ்மிகா தவிர, பூஜா ஹெக்டே, நோரா ஃபதேஹி ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் இந்தத் திரைப்படம், ஹாரர்-காமெடி பாணியில் ரசிகர்களை நடுங்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.