மாஸ் ஹிட் “ஜவான்” படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லீ தனது ஆறாவது படத்திற்கான அறிவிப்பை இன்னும் வெளிக்கொடுக்கவில்லை. இதனையடுத்து, அவர் தனது அடுத்த பிராஜெக்ட்டை தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் கூட்டணி சேர்ந்து உருவாக்க உள்ளார் என்ற வதந்திகள் வலம் வருகின்றன.
இந்த புது கூட்டணியின் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவிருக்கிறது என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஹீரோயினாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவிருக்கிறாராம் என சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என தற்போது தெரிய வந்துள்ளது.
முன்பாக, பிரியங்காவை சல்மான் கானுடன் இயக்கவிருந்த படத்திற்காக அட்லீ அணுகியிருந்தார் எனவும், ஆனால் அந்த திட்டம் கைமாறியதால் அந்த கூட்டணி அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த புதிய படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே இதனை உறுதிப்படுத்த முடியும்.