தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் சமந்தா. அவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகையாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது திறமையை நிரூபித்து வரும் சமந்தா, சமீபத்தில் ‘சுபம்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். இப்படம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் பதிவிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சமந்தா மிகவும் அழகாகவும், வசீகரமான தோற்றத்திலும் காட்சியளிக்கிறார். அவரது இந்த லேட்டஸ்ட் கிளிக்ஸை நீங்களே பாருங்கள்…