சர்தார் 2 ப்ரோலாக் டீசர் – உங்களை பரவசப்படுத்த தயாராக இருக்கிறதா?

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த சர்தார் திரைப்படத்தின் தொடர்ச்சியாக சர்தார் 2 உருவாகியுள்ளது.

முதற்கட்ட வெற்றியின் பேரில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் 2, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இசையை சாம் சி. எஸ் அமைத்துள்ளார்.

வெளியானது சர்தார் 2 டீசர்!

இந்நிலையில், சர்தார் 2 படத்தின் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த டீசர், படத்தின் பிரம்மாண்டத்தையும் அதிரடி அம்சங்களையும் வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

📽 இதோ உங்கள் பார்வைக்கு சர்தார் 2 படத்தின் டீசர்!