சிவாஜி கணேசனின் வீட்டை பறிக்க உத்தரவிட்ட அரசு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடித்த “ஜெகஜால கில்லாடி” படத்தை தயாரித்தார். இந்த பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றார். ஆனால், கடன் தொகையை திருப்பிச் செலுத்தாததால், நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

நீதிமன்றம், ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியும், அது செய்யப்படாததால், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயில்வான் ரங்கநாதன், “சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் செயல்களால் குடும்பத்திற்கு இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

துஷ்யந்த் தயாரித்த “ஜெகஜால கில்லாடி” படத்திற்காக வாங்கிய கடன், வட்டி உட்பட 9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், துஷ்யந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், நீதிமன்றம் கடன் தொகையை திருப்பித் தராவிட்டால், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது.

சிவாஜி கணேசனின் குடும்பத்தில் சொத்து பிரிவினை குறித்தும் பிரச்சனைகள் இருந்துள்ளன. அவரது மகள்கள் மற்றும் மகன்களான பிரபு, ராம்குமார் ஆகியோர் சொத்து பிரிவினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இறுதியில் சுமூகமாக சொத்து பிரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பயில்வான் ரங்கநாதன், “சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தபோதே உயில் எழுதி வைத்திருந்தால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது” என்று கருத்து தெரிவித்தார்.