‘மதராசி’ படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடைபெறாமல், லண்டனில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒரு இசைத் திருவிழாவாக மிக பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிவகாத்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இசை விழா நடைபெறுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், ஒரு சில ரசிகர்கள் தமிழ்நாட்டிலேயே நடத்தியிருக்கலாம் என தங்கள் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். ‘மதராசி’ படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் ரவிச்சந்தர் இந்த பிரமாண்ட விழாவில் படப் பாடல்களை நேரடியாக மேடையில் பாட வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், ‘மதராசி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஜூலை மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் தற்போது தாமதமாகி விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாடல் படத்தின் துவக்கப் பாடலாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான போஸ்டர் இணையத்தில் வைரலாகி, ‘மதராசி’ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிவகாத்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. ‘பராசக்தி’ படத்தில் சிவகாத்திகேயன் ஒரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயனின் இந்த அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள், தமிழ் திரையுலகில் அவருக்குள்ள மாஸ் அப்பீலை மீண்டும் நிரூபித்துள்ளது! ‘மதராசி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய இரு படங்களும் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!