நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆவேசமான கருத்துகளைத் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“இன்றைய அரசியலில் வெறும் திறமை மட்டும் போதாது; நிறைய வசதியும், பணமும் தேவைப்படுகிறது. நான் ஆளும் கட்சிக்கு எதிரானவன் கிடையாது. எந்தக் கட்சியையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ மாட்டேன். ஆனால், இங்கு போட்டி மிகவும் பயங்கரமாக இருந்தால்தான், வெற்றி நியாயமானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து,” என்று பார்த்திபன் பேசியுள்ளார்.
மேலும், கரூரில் நடந்த சம்பவத்தைப் போன்று இனி எந்த இடத்திலும் நிகழாமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உதவி இயக்குநராகத் தன் பயணத்தைத் தொடங்கி, ‘புதிய பாதை’ மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் முத்திரை பதித்த பார்த்திபன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் (நீ வருவாய் என, அழகி, அம்புலி போன்றவை) நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.