தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா, தற்போது ஒரு புதிய ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேகம் போன்ற வித்தியாசமான வடிவமைப்பில் உள்ள ஆடையில் அவர் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமன்னா கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் ‘அரண்மனை-4’, ‘ஜெயிலர்’ போன்ற படங்களில் நடித்ததுடன், அவரது நடனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலயா’ பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்ததோடு, படத்தின் வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், தமன்னா தனது புதிய ஸ்டைலிஷ் லுக்குடன் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது புதிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு, லைக்குகள் மற்றும் கருத்துகளை குவித்து வருகின்றன.
தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, கோலிவுட்டில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கும் மேலாக டாப்பில் இருந்தவர். தற்போது அவரது புதிய ஃபேஷன் ஸ்டேட்மென்ட், அவரது ஸ்டைல் மற்றும் க்ளாமர் பற்றிய பேச்சுக்களை மீண்டும் உருவாக்கியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் இந்த புதிய லுக் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமன்னாவின் ஃபேஷன் சென்ஸ் மீண்டும் ஒரு முறை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது!
View this post on Instagram