குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில், நடிகர் அஜித் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதைப் பெற்றுக்கொண்டார். திரையுலகமே வியந்து பார்க்கும் இந்த வரலாற்று தருணத்தில், அஜித்தின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நடிகர் அஜித்துடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட தமிழகத்தை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது
Posted inCinema News
தல அஜித்துக்கு பத்ம பூஷன்! திரையுலகம் கொண்டாட்டம்!
