ஜெர்மனியில் ‘தல’ அஜித் கொடுத்த மாஸ் அறிவுரை! – ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

ஜெர்மனியில் ‘தல’ அஜித் கொடுத்த மாஸ் அறிவுரை! – ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

நடிகர் அஜித்குமார் தனது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தனது முழு கவனத்தையும் கார் பந்தயத்தில் செலுத்தி வருகிறார். தற்போது ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயப் போட்டியில் கலந்துகொண்டுள்ள அவர், அங்கு தன்னைச் சந்தித்த ரசிகர்களிடம் நெகிழ்ச்சியான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

“என்னை அல்ல, விளையாட்டை பிரபலப்படுத்துங்கள்!”

ரசிகர்களிடம் பேசிய அஜித், “கார் ரேஸை பிரபலப்படுத்துங்கள். அது எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். நிறைய பேர் இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் எளிதானது என்று தவறாக நினைக்கிறார்கள். இந்த விளையாட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எவ்வளவு சவாலானது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், “இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக, மனரீதியாகக் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கஷ்டங்கள் பலருக்குத் தெரிவதில்லை. நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்கள் ஃபார்முலா 1 கார் ரேஸ் மட்டுமல்ல, அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் சாம்பியன் ஆவார்கள். ஒருநாள் இந்தியாவிலிருந்து நிச்சயமாக ஒரு ஃபார்முலா 1 சாம்பியன் உருவாகுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

அஜித்தின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை விட கார் பந்தயம் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் விதமாக அஜித்தின் இந்த பேச்சு இருப்பதாக ரசிகர்கள் பலரும் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.