பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தீபாவளி வாழ்த்துகளை வீடியோ மூலம் பகிர்ந்துகொண்டதோடு, தான் எழுதவிருக்கும் புதிய சிம்பொனி பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். தீபாவளி மற்றும் தனது தாயாரின் நினைவு தினத்திற்குப் பிறகு இந்த புதிய சிம்பொனியை எழுதவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் இளையராஜா தனது ‘வேலியண்ட்’ (Valiant) எனும் சிம்பொனியை அரங்கேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்த சிம்பொனி குறித்து அப்டேட் கொடுத்துள்ள அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபாவளி நாளில் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன். அத்துடன், ‘சிம்பொனி டான்சர்ஸ்’ என்ற புதிய இசைக் கோர்வையையும் எழுத இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.