தளபதி விஜய்யை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்!

விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ரஜினிகாந்த், அஜித் குமார் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார். சமீபத்தில் விஜய்க்கு சாதகமாக பேசியதாக கருதப்பட்ட அவர், இப்போது விஜய்யையும் ட்ரோல் செய்துள்ளார். இதனால், “ரஜினிகாந்தாக இருந்தால் ப்ளூ சட்டை மாறனின் டோன் வேறு மாறியிருக்கும்” என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தவெக கட்சியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் மட்டுமே கலந்து கொண்டார். இதைப் பற்றி ப்ளூ சட்டை மாறன், “தலைவர் விஜய் ஏன் கலந்து கொள்ளவில்லை?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதே நேரத்தில், விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் “ஜன நாயகன்” படத்தில் நடித்து வருகிறார், மேலும் பார்ட் டைம் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விஜய் ஏற்கனவே, “அரசியலுக்கு வந்தால் முழு நேர மக்கள் பணியே செய்வேன்” என்று அறிவித்திருந்தாலும், படப்பிடிப்பு மற்றும் அரசியல் சந்திப்புகளுக்கு இடையே சமநிலை பேணி வருகிறார். இருப்பினும், இதை காரணம் காட்டி சிலர் விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன், “அனைத்துகட்சி கூட்டத்துக்கு வராமல் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், விஜய் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “ஜன நாயகன்” படத்தை முடித்ததும், அரசியலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாராகி வருகிறார் என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. அவருக்கு யாரை பார்த்தும் பயமில்லை என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.