விஷால்-தான்ஷிகா திருமணம் நடக்குமா? நடக்காதா? குழப்பத்தில் ரசிகர்கள்!

விஷால்-தான்ஷிகா திருமணம் நடக்குமா?  நடக்காதா? குழப்பத்தில் ரசிகர்கள்!

கோலிவுட்டின் பரபரப்பான காதல் ஜோடிகளில் ஒருவரான நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தான்ஷிகா திருமணம், இன்று  நடைபெற இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே திருமணம் என்று விஷால் பல ஆண்டுகளாக உறுதியாகக் கூறிவந்தார். அதன்படியே, தன்ஷிகாவை அவர் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், திருமணம் நடைபெற இருந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஷாலின் தரப்பு, “திருமணம் ரத்து செய்யப்படவில்லை, நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால், ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று சமாளித்து வருகிறது. ஆனால், இந்த விளக்கம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒரு காதல் திருமணம், வெறும் கட்டிடப் பணிகளால் ஒத்திவைக்கப்படுமா? அல்லது வேறு ஏதேனும் பூசல்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டதா?

இந்த திடீர் ரத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த பல கிசுகிசுக்கள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. சிலர், “இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம்” என்றும், இன்னும் சிலர், “திருமணத்திற்கு பிறகு, தான்ஷிகா நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று விஷால் வற்புறுத்தியிருக்கலாம்” என்றும் யூகிக்கின்றனர்.

விஷால் மற்றும் தன்ஷிகா தரப்பில் இருந்து எந்தவிதமான தெளிவான விளக்கமும் இதுவரை அளிக்கப்படாததால், கோலிவுட்டில் இந்த திருமணம் குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. இந்த காதல் கதை, இத்துடன் முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் மலருமா என்பது காலத்தின் கையில் உள்ளது.