
நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் தமது கடமைகளை மேற்கொள்ள முடியாது மிகவும் சிரமமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வங்காள விரிகுடாவில் நிலைகொன்டுள்ள தாழமுக்கம் புயலாக மாற்றமடைந்தமையினால் கடந்த மூன்று நாட்களாக தொடரச்சியான கடல் சீற்றத்துடன் மழையும் காற்றும் காணப்படுவதுடன் என்றுமில்லாதளவிற்கு கடுமையான பனீமூட்டத்துடன்கூடிய அதிகரித்த குளிர்ச்சியான காலநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடமைகளுக்கு செல்லமுடியாது வீடுகளுக்குல் முடங்கியுள்ளனர். அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடணடியாக நிவாரண உதவிகளை முன்னெடுக்குமாறு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.