“பிதாமகன்” பட நடிகர் திடீர் மரணம்… பேரதிர்ச்சியில் திரையுலகம்!

பிதாமகன்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக மரணித்து வருவதை பலரால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து மரணத்தை தழுவி வருகிறார்கள் விவேக் , மனோபாலா, மயில்சாமி இப்படி பல்வேறு காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து மரணத்தை தழுவி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா விக்ரம் நடித்த வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் நடிகை லைலாவுக்கு அப்பாவாக நடித்து பிரபலமான காமெடி நடிகரான விஸ்வேஸ்வர ராவ் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணித்துள்ளார். இவர் இதுவரை 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த புகழ் பெற்றிருக்கிறார்

அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து மேலும் வெளியான விவரமான செய்தி என்னவெனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து அவரது உடல்சென்னை சிறுசேரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:

15 வயசு வித்யாசம்…. வரதட்சணை வாரி கொடுத்த ரோபோ சங்கர் – எத்தனை கோடி தெரியுமா?