கணவனை காலால் உதையும் கேக் Party : விவாகரத்து பார்டிகளால்(party) களை கட்டும் பிரித்தானியா

கணவனை காலால் உதையும் கேக் Party : விவாகரத்து பார்டிகளால்(party) களை கட்டும் பிரித்தானியா

எதுக்கு எடுத்தாலும் Party வைப்பது ஒரு பழக்கமாக மாறிவிட்டது. கார் வாங்கினால் Party, வீடு வாங்கினால் Party, கல்யாணம் கட்டினால் பார்டி, தற்போது விவாகரத்திற்கும் பார்ட்டி வைப்பது பெரும் ட்ரெண்டாக மாறிவிட்டது. அதுவும் பிரித்தானியாவில். இந்த விவாகரத்திற்கு கேக் செய்து கொடுக்கும் நபர்கள் காட்டில், அடை மழை தான். காசு கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது . இவர்களும் சளைத்தவர்கள் அல்ல. விதம் விதமாக கேக் செய்து அதனை விற்று . கிக் ஏத்தி சம்பாதிக்கிறார்கள்.

கொரோனாவுக்குப் பின்னர் பிரித்தானியாவில் விகாரத்து கோரும் பெண்களின் தொகை பன்மடங்காக, அதிகரித்துள்ளது. அதிலும் இவர்கள் விவாகரத்து பெற்ற உடனே அடிக்கும் லூட்டியே தனி. உடனே விவாகரத்து பார்ட்டி ஒன்றை அறிவிக்கிறார்கள். தான் சிங்கிள் என்று ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இந்த பார்ட்டிக்கு கேக் ஆடர் செய்கிறார்கள். அதில் பல ரகம் உள்ளது. கணவன் மீது ஏற்பட்ட வெறுப்பை, அந்த கேக் பிரதிபலிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதனால் கேக் செய்யும் நபர்களிடம் , ஆடர் கொடுக்கும் போது.

தனக்கு நடந்த சோகங்களை சொல்வது மட்டுமல்லாது, கேக் எப்படி இருக்கவேண்டும் என்ற ஐடியாவை அவர்களே சொல்கிறார்கள். உடனே கேக் தயாராகிறது. மேலும் சொல்லப் போனால் விவாகரத்தான இன்னும் ஒரு, 5 பெண்களை பார்டிக்கு அழைத்து, நன்றாக சரக்கடித்து கொண்டாடுகிறார்கள். “இன்று முதல் எனக்கு விடுதலை” என்கிறார்கள். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், திருமணமான பெண்கள் விவாகரத்து Party செய்தால் கூட ஓகே. ஆனால் லிவ்விங்(Living) இருந்த பெண்கள், காதலித்து விட்டு ஆண்களை களற்றி விட்ட பெண்கள் என்று , எல்லா வகையான பெண்களும் இந்த விவாகரத்து பார்டி செய்கிறார்கள் என்பது தான் வேடிக்கை கலந்த சோகமான விடையம்.

அட்ஜஸ்ட் செய்து வாழ இவர்கள் தயாராக இல்லை. பழைய காலம் போல பொறுத்து போகும் குணங்கள் ஆண் பெண் இருவரிடமும் தற்போது குறைந்து வருகிறது. இது அப்பா அம்மாவின் வழர்ப்பில் பிழையா ? இல்லை சமுதாய பிழையா தெரியவில்லை ? பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்பட்ட விளைவா ? அதுவும் புரியவில்லை.

தற்போதைய நவீன உலகில் , ஆண்கள் விவாகரத்து கோருவது மிக மிகக் குறைவடைந்துள்ள நிலையில். . பெண்கள் விவாகரத்து கோருவதே அதிகமாக உள்ளது. அதுவும் காரணங்களை கேட்டால் நீதிபதியே தலை சுற்றி கீழே விழுந்து விடுவார். அப்படியான ஒரு காலகட்டத்தில் தான் நாம் அனைவரும் இருக்கிறோம். போதாக்குறைக்கு சிங்கிள் பெண்களுக்கு என்று ஒரு மோதிரம் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அதனை விரலில் போட்டால் அது தான் விவாகரத்தான அல்லது பிரிந்துவிட்டோம் என்பதற்கு அடையாளமாம். காலக் கொடுமை சரவணா !