புதிய நடவர்…. மாஸாக வெளிவந்த “குக் வித் கோமாளி 5” PROMO வீடியோ!

புதிய நடவர்…. மாஸாக வெளிவந்த “குக் வித் கோமாளி 5” PROMO வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த சீசன் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஐந்தாம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஆனால் இந்த சோவில் நடுவராக இதற்கு முன் வரை இருந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள்.

அதுவே குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாகவும் இடி விழுந்தது போலும் ஆகிவிட்டது. அவருக்கு வேறு ஏதாவது புது நிகழ்ச்சி கிடைத்து விட்டதா? அல்லது வேற ஏதாவது சேனல்களில் அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு சென்று விட்டாரா என்றெல்லாம் விதவிதமான கதைகள் வெளியாகி செய்தியாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் காத்திருந்தனர். அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவி கூட்டணியிலிருந்து விலகுவதாக வருத்தத்துடன் அறிவித்து விட்டன இதனால் என்னதான் ஆச்சு இந்த ஷோக்கு மொத்தமாக ஊற்றி மூட போகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து குக் வித் கோமாளி ஐந்தாம் சீசனில் தாமு உடன் ஒரு புது நடுவரை களமிறங்க இருக்கிறதாம். விஜய் டிவி மெஹந்தி சர்க்கஸ் பட நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் புது நடுவராக இந்த நிகழ்ச்சிக்கு வர உள்ளார் என செய்திகள் வெளியானது.

அவர் தொழிலதிபர் என்பதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சமீப காலமாக பெரிய பெரிய பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கல்யாண நிகழ்ச்சிகளில் மாதம் பட்டி ரங்கராஜன் சமையல்தான் கம கம என வாசம் வீசுகிறது.

அவ்வப்போது அதை பற்றிய வீடியோக்களும் சார்ட்ஸ்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது இந்த நிலையில் பிரபலமாக இருந்து வரும் இவர் தற்போது பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளின் திருமணத்திற்கு சமைத்த இவர் தற்போது குக் வித் கோமாளி கோமாளி நிகழ்ச்சியில் இணைய உள்ளார்.

இவரை இந்த ஷோவில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவர்கள் சமையல் கலையை பார்க்க மிகுந்த வியப்புடன் இருக்கிறார்கள்.இவர் ஏற்கனவே தமிழ் திரைப்படங்களில் நடித்த ஒரு ஹேண்ட்ஸம் ஹீரோவாக பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் தொழில் ரீதியாக மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வளர்ச்சியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது வெளியான அணைத்து செய்தியும் உண்மையாகிவிட்டது. ஆம், தற்ப்போது குக் வித் கோமாளி 5ம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் செஃப் தாமு உடன் இன்னொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்திருக்கிறார். இரண்டு நடுவர்களை மாஸாக விமானத்தில் வந்து இறங்குவது போல இந்த ப்ரோமோ வந்திருக்கிறது. இதோ வீடியோ :