
தனது வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் வெற்றிமாறன். அவரின் அடுத்த படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்தபடத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் முதல் நாளிலே 8 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை அடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து வாழ்த்து தெரிவித்தனர்.


