
நடிகை ஹன்சிகா மோர்த்வானியின் வைரலாகும் புகைப்படங்கள்……..
இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியெனப் பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். 2003 ல் “ஹவா” என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக ஐந்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
2007 ல் “தேசமுருது” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அதன் பின் 2011 ல் “மாப்பிள்ளை” என்ற தமிழ் படத்தில் நடித்து அறிமுகமானார். அதே ஆண்டில் ஜெயம்ரவியுடன் இணைந்து “எங்கேயும் காதல்” என்ற படத்தில் நடித்து இளசுகளை கவர்ந்தார். அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
பல படங்களை நடித்த ஹன்சிகா அடுத்த படம் எப்போது அறிவிப்பார் என்று ரசிகர் எதிர்பார்த்த நிலையில் அவரின் காதலரை அறிமுகம் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது ரவுடி பேபி, காந்தாரி, பாதுகாவலர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்.







