“க்யூட் ஸ்மைல்”… நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி….

Spread the love
ஸ்ரீநிதி

2018 ல் வெளியான கேஜிஎப் படத்தில் யாஷிடன் இணைந்து கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான இந்தப் படம் உலக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 12 நாட்களிலே 900 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.

இதற்கு முன் மிஸ் சுப்ரநேஷனல் என்ற பட்டத்தினை பெற்றுள்ளார். அதன் பிறகு ஸ்ரீநிதிக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் கேஜிஎப் 2 வில் மீண்டும் கதாநாயகியாக நடித்து ஹிட் கொடுத்தார். பிரமாண்ட படங்களுக்குப் பின் சியான் விக்ரமுடன் இணைந்து அதிரடி படமான கோப்ரா என்ற படத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி வித வித போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். தற்போது நியூ ஹேர் ஸ்டைலில் போட்டோஷுட் எடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.